MEDIA STATEMENT

ஒற்றுமை, சகிப்புத் தன்மையை வளர்போம்- தைப்பூச வாழ்த்துச் செய்தியில் சுல்தான் தம்பதியர் அறைகூவல்

25 ஜனவரி 2024, 8:06 AM
ஒற்றுமை, சகிப்புத் தன்மையை வளர்போம்- தைப்பூச வாழ்த்துச் செய்தியில் சுல்தான் தம்பதியர் அறைகூவல்

ஷா ஆலம், ஜன 25- இன்று  கொண்டாடப்படும் தைப்பூச விழாவை முன்னிட்டு அனைத்து இந்துக்களுக்கும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் தெங்கு பெர்மைசூரி தம்பதியர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

பல இன,  சமய மக்களுக்கிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் இந்த பெருநாள் அமைய வேண்டும் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி ஹாஜ்ஜா நோராஷிகின் தம்பதியர் கேட்டுக் கொண்டனர்.

இத்தகைய ஒற்றுமை உணர்வின் வாயிலாக அனைவருக்கிடையிலும் சமத்துவத்தை உருவாக்க இயலும் என்று சிலாங்கூர் அரச அலுவலகத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தைப்பூச வாழ்த்துச் செய்தியில் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நாட்டில் அனைத்து விழாக்களும் பரஸ்பரம் மரியாதை, சகிப்புத் தன்மை மற்றும் நல்லிணக்க உணர்வோடு கொண்டாடப்பட வேண்டும் என்று அவர்கள் அந்த பதிவில் கூறினர்.

இன்று தைப்பூச விழாவைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் குறிப்பாக சிலாங்கூர்வாசிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு இவ்விழா நெறியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கிறோம் என அரச தம்பதியர் மேலும் தெரிவித்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.