MEDIA STATEMENT

கிள்ளானில் இன்று தேசிய நிலையிலான ஒற்றுமைப் பொங்கல்-  பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டுகோள்

20 ஜனவரி 2024, 1:48 AM
கிள்ளானில் இன்று தேசிய நிலையிலான ஒற்றுமைப் பொங்கல்-  பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டுகோள்

கிள்ளான், ஜன 20-  தேசிய நிலையிலான 2024 ஆம் ஆண்டு ஒற்றுமைப் பொங்கல் இன்று கிள்ளான், லிட்டில் இந்தியாவில் உள்ள செட்டி பாடாங்கில் நடைபெறவிருக்கிறது.

இரவு 8.00 மணிக்குத் தொடங்கும் இந்த  விழாவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  அதிகாரப்பூர்மாகத் தொடக்கி வைத்து உரையாற்றுவார்.

இந்நிகழ்வில் ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங், துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் நாடாளுமன்ற,  சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வர்.

 சிலாங்கூர் மாநில அரசு, ஒற்றுமைத் துறை அமைச்சு மற்றும் சிலாங்கூர் இந்தியர் எக்ஸ்கியூட்டிவ் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த பொங்கல் நிகழ்வின் சிறப்பு அங்கமாக  ரஹ்மா உணவுக் கூடைகள் வழங்கும் அங்கமும் இடம் பெறும்.

சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பொது மககள் திரளாகக் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.