ANTARABANGSA

மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா திட்டம் மீண்டும் தொடங்கியது- இன்று மூன்று இடங்களில்  விற்பனை

15 ஜனவரி 2024, 1:55 AM
மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா திட்டம் மீண்டும் தொடங்கியது- இன்று மூன்று இடங்களில்  விற்பனை

ஷா ஆலம், ஜன 15 - சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) இவ்வாண்டிற்கான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று தொடங்கி  தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடை பெறவுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் இந்த விற்பனை மேரு தொகுதியின் அல்-ஃபாலா பள்ளிவாசல், கின்றாரா தொகுதியின் சமூக சேவை மையம், செமெந்தா தொகுதியில் லோட் 6449 ஜாலான் கெம்பாஸ் பத்து 9, புக்கிட் காப்பார் ஆகிய இடங்களில் காலை 10.00 மணி தொடங்கி நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இவ்வாண்டு நாடு முழுவதும் உள்ள 1,800 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்படும் என்று பி.கே.பி.எஸ். விற்பனைப் பிரிவு தலைமை நிர்வாகி முகமது பஷீர் அப்துல் லத்திப் முன்னதாக கூறியிருந்தார்.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.