MEDIA STATEMENT

காணாமல் போன  சகோதரர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்

5 ஜனவரி 2024, 9:20 AM
காணாமல் போன  சகோதரர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்

கோலாலம்பூர், ஜன 5: கடந்த திங்கட்கிழமை காலை முதல் சிலாங்கூர் உலு பெர்ணமில் உள்ள தாமான் பெர்ணம் ஜெயாவில் காணாமல் போனதாகக் கூறப்படும் 16 மற்றும் 15 வயதுடைய இரண்டு சகோதரர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வான் அஸ்பர் ஃபித்ரி வான் அசார் மற்றும் அவரது இளைய சகோதரர் வான் அஸ்பர் ஜிக்ரி என அழைக்கப்படும் இரு இளைஞர்களும் திங்கட்கிழமை காலை தொழுகைக்குப் பிறகு தாமான் பெர்ணம் ஜெயா, ஜாலான் கெமுடியில் உள்ள வீட்டில் கடைசியாக காணப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட காவல் துறைத் தலைவர்  சூப்பரின்டெண்டன்ட் அஹ்மத் ஃபைசல் தஹ்ரிம் தெரிவித்தார்.

“கடந்த திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் அவர்கள் வீட்டில் இல்லாததை பெற்றோர்கள் கண்டறிந்ததாக," அவர் கூறினார்.

சகோதரர்கள் பெற்றோர் இருவரும் மறுநாள்  (செவ்வாய்க்கிழமை) காலை 9.19 மணிக்கு காவல்துறையில் புகார் அளித்தனர் என அஹ்மத் ஃபைசல் தெரிவித்தார்.

இரண்டு சகோதரர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறும் அல்லது விசாரணை அதிகாரி (0135547435) மற்றும் அவர்களின் பெற்றோரை (01111335305) தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.