MEDIA STATEMENT

இனங்களுக்கிடையே மதிக்கும் பண்பை விதைப்போம்- கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் சுல்தான் தம்பதியர் வலியுறுத்து

25 டிசம்பர் 2023, 5:08 AM
இனங்களுக்கிடையே மதிக்கும் பண்பை விதைப்போம்- கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் சுல்தான் தம்பதியர் வலியுறுத்து

ஷா ஆலம், டிச 25- இன்று கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவ சமயத்தினருக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

பல்லின மற்றும் பல சமய மக்களிடையே அமைதி, சுபிட்சம் மற்றும் நல்லிணக்கத்தை பேணி காப்பதற்கு ஏதுவாக ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பை இந்த பெருநாள் விதைக்கும் எனத் தாங்கள் நம்புவதாக சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மைசூரி ஹாஜ்ஜா நோராஷிகின் தம்பதியர் கூறினர்.

இந்த பெருநாளில் பரிவு மற்றும் நன்றியுணர்வை பரிமாறிக் கொள்ளும் அதேவேளையில் தங்களின் நேசத்திற்குரியவர்களுடன் மகிழ்ச்சியாகவும் பொருநாளைக் கொண்டாடுவார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அரச அலுவலகத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அரச தம்பதியர் குறிப்பிட்டுள்ளனர்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.