ACTIVITIES AND ADS

நாளை மற்றும் ஞாயிறன்றும் ஏழு செகி ஃப்ரெஷ் கிளைகளில் எஹ்சான் ரஹ்மா விற்பனை

22 டிசம்பர் 2023, 5:02 AM
நாளை மற்றும் ஞாயிறன்றும் ஏழு செகி ஃப்ரெஷ் கிளைகளில் எஹ்சான் ரஹ்மா விற்பனை

ஷா ஆலம், டிச 22: சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்துடன் (பிகேபிஎஸ்) இணைந்து எஹ்சான் ரஹ்மா விற்பனை நாளை மற்றும் டிசம்பர் 24,  ஞாயிற்றுக்கிழமை அன்று, ஏழு செகி ஃப்ரெஷ் பல்பொருள் அங்காடி கிளைகளில் நடைபெறும்.

இந்த விற்பனை கோல குபு பாரு, சௌஜானா உத்தாமா மற்றும் பந்திங் ஆகிய இடங்களில் நாளை நடைபெறும். பின்னர், தஞ்சோங் காராங், காஜாங், தாமான் அமினா மூலியா ஆகிய கிளைகளில் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவிருக்கிறது.

“பிகேபிஎஸ் உடன் இணைந்து, தேவைப்படுபவர்களுக்குக் குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தொடர்ந்து குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு நன்மைகளை வழங்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.

இந்த விற்பனையில் கோழி ஒரு கிலோ 6.99 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் சியாகாப் மீன் ஒரு பை 7.00 வெள்ளிக்கும் டி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கோதுமை ஒரு பாக்கெட் 2.00 வெள்ளிக்கும் சமையல் எண்ணெய் 5 கிலோ 25.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

“செகி ஃப்ரெஷில் மலிவான மற்றும் தரமான அடிப்படைத் தேவைகளைப் பெறுங்கள்”.

இதுவரை ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ள 2,850 இடங்களில் ஏற்பாடு செய்த மலிவு விற்பனை திட்டத்திற்குச் சிலாங்கூர் அரசாங்கம் RM40 மில்லியன் மானியங்களை செலவிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மலிவு விற்பனையை ஏற்பாடு செய்வதோடு, உள்ளூர்வாசிகளுக்கு அதன் வரம்பை விரிவு படுத்துவதற்காகச் செகி ஃப்ரெஷ் உடன் பிகேபிஎஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.

மலிவு விற்பனையின் சமீபத்திய இருப்பிடத்தை பிகேபிஎஸ் முகநூலில் அல்லது விற்பனை போஸ்டர் அல்லது linktr.ee/myPKPS இல் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.