MEDIA STATEMENT

அக்டோபர் முதல் காணாமல் போன 11 வயதுச் சிறுவன் கண்டுபிடிக்க உதவுவீர்- பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள்

6 டிசம்பர் 2023, 4:34 AM
அக்டோபர் முதல் காணாமல் போன 11 வயதுச் சிறுவன் கண்டுபிடிக்க உதவுவீர்- பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள்

கோலாலம்பூர், டிச 6- இவ்வாண்டு அக்டோபர் 26ஆம் தேதி முதல் காணாமல் போன 11 வயதுச் சிறுவனைக் கண்டு பிடிப்பதில் பொது மக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.

முகமது கைருள் இக்வான் முகமது ரஷிட் என்ற அந்தச் சிறுவன் எண்.பி10-11-07, புளோக் 10, பிஜேஎஸ் 2பி/1 டேசா மெந்தாரி 2 எனும் முகவரியில் அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் இறுதியாக காணப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஃபாக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

அச்சிறுவன் காணாமல் போனது தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி தாங்கள் புகரைப் பெற்றதாக அவர் சொன்னார்.

மெலிந்த உடலும் கட்டையான தலைமுடியும் கொண்ட அச்சிறுவன் வீட்டை விட்டு வெளியேறும் போது டி சட்டையும் கருப்பு நிற டிரக் சூட்டும் அணிந்திருந்த தாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அச்சிறுவனின் இருப்பிடம் அறிந்தவர்கள் அல்லது அவரை அறிந்தவர்கள் 03-79662222 என்ற எண்களில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை அறையை அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.