MEDIA STATEMENT

சூப்பர் லீக் கால்பந்து போட்டி- சிலாங்கூர் எப்.சி. 1-0 கோல் கணக்கில் கெடாவை வீழ்த்தியது

3 டிசம்பர் 2023, 3:28 AM
சூப்பர் லீக் கால்பந்து போட்டி- சிலாங்கூர் எப்.சி. 1-0 கோல் கணக்கில் கெடாவை வீழ்த்தியது

ஷா ஆலம், டிச 3- அலோர்ஸ்டார், டாருள் அமான் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சிலாங்கூர் எப்.சி. குழு கெடா டாருள் அமான் எப்.சி. குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் வழி சிலாங்கூர் குழு 58 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இக்குழு வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் இறுதியாட்டத்தில் பி.டி.ஆர்.எம்.எப்.சி குழுவை சந்திக்கவுள்ளது.

இவ்வாட்டத்தில் கடுமையான போட்டியை எதிர்நோக்கிய சிலாங்கூர் குழு ஆட்டத்தின் 64வது நிமிடத்தில்  ஏரோன் வேலி அடித்த கோலின் வழி வெற்றியைப் பதிவு செய்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கெடா குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் வான் அமிருடிள் அஃபிக் சிலாங்கூர் அரணைத் ஊடுருவி வலுவான தாக்குதலை நடத்தினார். எனினும், அந்த தாக்குதல் இலக்கு தவறியதால் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தும் வாய்ப்பினை அந்த சாங் கெனாரி குழு இழந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.