ANTARABANGSA

சந்திரயான் -1 திட்ட இயக்குனர்  மயில்சாமியுடன் அமைச்சர் சிவகுமார்  சந்திப்பு

3 டிசம்பர் 2023, 3:09 AM
சந்திரயான் -1 திட்ட இயக்குனர்  மயில்சாமியுடன் அமைச்சர் சிவகுமார்  சந்திப்பு

கோலாலம்பூர் டிச 3-  கோலாலம்பூரில் நடைபெறும் கோபியோ அனைத்துலக விருதளிப்பு விழாவுக்கு இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வருகை புரிந்துள்ளார்

நேற்றிரவு புத்ரா உலக வாணிப மையத்தில் மெர்டேக்கா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் இவர் கலந்து கொண்டார்.

இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய மனிதவள அமைச்சர் வ சிவகுமார், சிறப்பு பிரமுகர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை' நேரில் சந்தித்து உரையாடினார்.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நேரில் சந்தித்து உரையாடியது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தற்போது இந்திய தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

.இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார்.

அந்த சமயம் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனை இவரைச் சாரும்.

இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர்.

இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், "கையருகே நிலா" என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை குறித்து நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

சந்திரயான்-1 திட்டத்திற்காக மூன்று சர்வதேச விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.