ANTARABANGSA

இஸ்ரேலுடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஹமாஸ் முயற்சி

27 நவம்பர் 2023, 8:02 AM
இஸ்ரேலுடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஹமாஸ் முயற்சி

காசா, நவ 27- காஸா தீபகற்பத்தில் இஸ்ரேலுடனான தற்காலிக போர் நிறுத்தத்தை தொடர விரும்புவதாக ஹமாஸ் நேற்று கூறியது.

இதனிடையே,  போர் நிறுத்தத்தை இன்னும் இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு தொடர்வது தொடர்பான தங்களின் விருப்பத்தை ஹமாஸ் கட்டார் மற்றும் எகிப்திடம் தெரிவித்துள்ளதாக பாலஸ்தீன வட்டாரங்களை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சமரச ஏற்பாட்டில் தற்காலிக போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து காஸா தீபகற்பத்தில் இஸ்ரேல் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதல் தொடங்கியதிலிருந்து 6,150 சிறார்கள் மற்றும் 4,000 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட குறைந்தது 14,854 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர் என்று காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.