MEDIA STATEMENT

மந்திரி புசாருடன் ஐ.பி.எஃப். கட்சி பொறுப்பாளர்கள் சந்திப்பு

25 நவம்பர் 2023, 8:36 AM
மந்திரி புசாருடன் ஐ.பி.எஃப். கட்சி பொறுப்பாளர்கள் சந்திப்பு

ஷா ஆலாம், நவ.25- ஐ.பி.எஃப். கட்சியின்  தேசியத் தலைவர், டத்தோ டி.லோகநாதன் தலைமையில் சிலாங்கூர் மாநிலப் பொறுப்பாளர்கள் மாநில மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை  மரியாதை நிமித்தம் நேரில் சென்று சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான தற்போதைய ஒற்றுமை அரசுக்குத் தாங்கள் முழு ஆதரவு வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பொதுச் சேவை துறை, நகராண்மைக் கழகங்களில் இந்தியர்களுக்கு அதிகமாக வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும், இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு நன்முறையில் தீர்வு காண வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இக்குழுவில் சிலாங்கூர் மாநில ஐ.பி.எஃப். தொடர்புக் குழுத் தலைவர் டி.இங்கர்சால், மாநில ஐ.பி.எஃப். துணைத் தலைவர் டாக்டர் ஜீ.பன்னீர் செல்வம், உதவித் தலைவர் எம்.மோகன், கட்சியின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் எஸ்.கணேஷ் குமார், கோல லங்காட் தொகுதித் தலைவர் டத்தோ எம்.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.