ANTARABANGSA

பி.வி.சி. குழாயில் ஆசிரியர் தாக்கியதில் எட்டு வயதுச் சிறுவன் காயம்

19 நவம்பர் 2023, 10:34 AM
பி.வி.சி. குழாயில் ஆசிரியர் தாக்கியதில் எட்டு வயதுச் சிறுவன் காயம்

சிக், நவ 29-   ஆசிரியர் பிரம்பால் அடித்ததால்  இங்குள்ள மதரஸாவில் பயிலும் இந்தோனேசியாவைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் உள்ளங்கை மற்றும் கால்களில் காயங்களுக்குள்ளானார்.

கடந்த நவம்பர் 11ஆம் தேதி இரவு 9.24 மணியளவில்  வளர்ப்புத் தாய் அச்சிறுவனின்  கைகால்களில் காயங்களையும் உடம்பில் வீக்கத்தையும் கண்டு  போலீசில் புகார் செய்ததாக சிக் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி அப்துல் ரசாக் உஸ்மான் கூறினார்.

தனது வளர்ப்பு மகனின் உள்ளங்கைகள் மற்றும் கால்களில் காயம் ஏற்படும் அளவுக்கு பிரம்பினால் தாக்கப்பட்டதாக   பினாங்கில்  மழலையர் பள்ளி நடத்தி வரும்  40 வயதானவர்  மீதான புகாரில்  குறிப்பிட்டுள்ளதாக என அவர் சொன்னார்.

புகார்தாரர் திடீரென மதரஸாவிற்குச் சென்று தனது வளர்ப்பு மகனை வெளியே சாப்பிட அழைத்துச் சென்றபோது அவரது உடலில் காயங்கள் உள்ளதை கவனித்துள்ளார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 12ஆம் தேதி காலை 10.38 மணியளவில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், மதரஸாவில் ஆசிரியராகப் பணிபுரியும் 27 வயது இளைஞரை  கைது செய்தனர் என அவர் குறிப்பிட்டார்.

அந்த மாணவரை அடிப்பதற்கு  சம்பந்தப்பட்ட ஆசிரியர் பி.வி.சி.  குழாயைப்

பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் விளைவாக உடலில் காயங்கள் மற்றும் வீக்கம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.  மருத்துவ பரிசோதனையில் சிறுவனின் மென்மையான திசுக்களில் காயம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.