MEDIA STATEMENT

மேன்மை தங்கிய சுல்தான் தம்பதியினர் தீப ஒளியின் பிரகாசத்தில்  ஒற்றுமை உணர்வுகள் ஓங்க வாழ்த்தினர்.

12 நவம்பர் 2023, 11:22 AM
மேன்மை தங்கிய சுல்தான் தம்பதியினர் தீப ஒளியின் பிரகாசத்தில்  ஒற்றுமை உணர்வுகள் ஓங்க வாழ்த்தினர்.

ஷா ஆலம், நவ. 12: மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர் இந்த ஒளி விழா நல்லிணக்கம், மரியாதை மற்றும் ஒற்றுமையுடன் கொண்டாடப்படும் என்று நம்புகிறார்கள்.

சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூலில் பகிரப்பட்ட அறிக்கையின்படி, "தீபாவளி பண்டிகையின் அடையாளமாக விளங்கும் ஒளியின் மிகுதியானது மலேசியாவில் இன ஒற்றுமையின் உணர்வை வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்வதில் தொடர்ந்து ஒளிரச் செய்யும்" என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.