MEDIA STATEMENT

 ஒரு நாள் வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்! அமைச்சர் சிவகுமாரின்  தீபாவளி வாழ்த்து

11 நவம்பர் 2023, 9:48 AM
 ஒரு நாள் வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்! அமைச்சர் சிவகுமாரின்  தீபாவளி வாழ்த்து

புத்ரா ஜெயா அக் 11- வாழ்வில் சூழ்ந்து நிற்கும் தீமைகளும்  இருளும்   அகன்று

நன்மை  பிறக்கும் நன்னாளாக தீபாவளி போற்றப்படுகிறது.

இருளை அகற்றி ஒளியூட்டி இந்தியர்களின்  வாழ்வியலில் உயர்ந்து அமைதியும், சுபீட்சமும் அமைந்து வாழ வேண்டும் என்பதே எனது இந்த நன்னாளில் வாழ்த்துக்களாக சமர்ப்பிக்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சமுதாயம் ஒரு கல்வி கற்ற சமுதாயமாக திகழ வேண்டும் மனதார வாழ்த்துகிறேன்.

நமது மலேசிய நாட்டில் நமது சமூகத்தினர் உயர்ந்திட,  அரசியல், பொருளாதாரம் கல்வித்துறை மற்றும் வர்த்தகத் துறைகளில் சிறந்து விளங்க புதிய வியூகங்களோடு  புத்தாக்க சிந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு புதிய உருமாற்றங்களுக்கு தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இனபேதமின்றி அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்கிறது.

தேசிய நீரோட்டத்தில் இந்திய சமுதாயம் அனைத்து துறைகளிலும் வெற்றி போட இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

இந்த அருமையான தருணத்தில் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் துன்பம் விலகி என்றும்  ஒளி வீசட்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது வாழ்த்து செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.