MEDIA STATEMENT

ஏற்றமிகு எதிர்காலம் மெய்ப்பட ஒன்றிணைந்து மறுமலர்ச்சி காண்போம்-  டத்தோ ரமணன் தீபாவளி வாழ்த்து

11 நவம்பர் 2023, 8:52 AM
ஏற்றமிகு எதிர்காலம் மெய்ப்பட ஒன்றிணைந்து மறுமலர்ச்சி காண்போம்-  டத்தோ ரமணன் தீபாவளி வாழ்த்து

ஷா ஆலம், ஜன 11- இந்நாட்டிலுள்ள இந்திய சமூகம் ஒன்றிணைந்து மறுமலர்ச்சி காண இந்த தீபாவளி திருநாளில் உறுதி கொள்வோம் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.

நாட்டில் உள்ள இந்தியர்களின் ஏற்றமிகு வாழ்வாதாரம்  மெய்ப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நாளை தீபாவளித் திருநாளை கொண்டாடவிருக்கும்  அனைத்து இந்துக்களுக்கும் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய இந்தியர்களின் வாழ்வில் ஒளியேற்றும் சக்தி கொண்ட மித்ரா செயலகத்தின் செயல்பாடுகள் 100 விழுக்காடு சீர் பெற்றுள்ளதை அந்த வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டிய அவர், 10 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டுக்கான மித்ரா திட்டங்கள் யாவும் முதன் முறையாக முழுமையாக பூர்த்தி செய்யப் பட்டுள்ளன என்றார்.

சீர்நோக்கிய முட்பாதையில் மித்ராவின் முழு முதல் வெற்றி இது. இனி வரும் ஆண்டுகளில் அதீத முன்னெடுப்புகள் மூலம் சமூகம் உருமாற்றம் காணும் என்று உறுதி என்று மித்ரா எனப்படும் இந்திய சமூக உருமாற்றுப் பிரிவின் சிறப்பு பணிக்குழு தலைவருமான டத்தோ ரமணன் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.