காஜாங் நவ 06-எல்லாக் காலங்களிலும் சகோதரத் தன்மையை நிலைநிறுத்தவும் ஒற்றுமை வலுப்படுத்தும் பண்டிகையாக தீபாவளி திருநாள் கொண்டாட வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு வலியுறுத்தினார்.
பாரபட்சம் இல்லாமல் சிலாங்கூர் மாநில அரசாங்கம் அனைத்து தரப்பினரின் நல்வாழ்வுக்கும் பெரும் பங்காற்றி வருகிறது என அவர் கூறினார்.
நேற்று காஜாங் புக்கிட் மேவா சமூக நல மண்டபத்தில் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
பி40 பிரிவைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு முழு கவனம் செலுத்தி வருகிறது.
அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. பல இன மக்களின் நல்வாழ்வுக்கு பயன் தரும் திட்டங்கள் முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு மூன்று அரசு சாரா அமைப்புகளுடன் ஒன்றிணைந்து சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பரிவுமிக்க உதவித் திட்டத்தில் ஆதரவுடன் 100 வசதி குறைந்த குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது.
பாலகிருஷ்ணன் துரைசாமி அவர் தம் குழுவினர் இணைந்து சிறுவர்களுக்கான தீபாவளி அன்பளிப்பு, ஆடல் பாடல் என அறுசுவை உணவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செசு ஆனந்த், டாக்டர் முரளிதரன் பரமசிவம், முன்னாள் சுங்கை ராமல் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹோர், காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ஆர். தியாகராஜா, ஒங் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.







