MEDIA STATEMENT

புக்கிட் கியாரா, ரூமா பாஞ்சாங் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு வெ.30,000 மானியம் !அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

5 நவம்பர் 2023, 2:58 AM
புக்கிட் கியாரா, ரூமா பாஞ்சாங் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு வெ.30,000 மானியம் !அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர், நவ 5-  டமான்சாரா புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மேம்பாட்டு பணிகளுக்கு 30,000 வெள்ளியை வழங்குவதாக மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்.

புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கில் நேற்று நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் மனிதவள அமைச்சர் சிவகுமார் கலந்து சிறப்பித்தார்.

புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் மனோ பரமசிவம், புக்கிட் கியாரா சமூக நல இயக்கத்தின் தலைவர் நாகராஜன் மற்றும் புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் குடியிருப்பாளர்கள் சங்கத்தின் அழைப்பை ஏற்று சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவிலை சீரமைக்கும் பணிக்கு உதவும் படி அமைச்சர் சிவகுமாரை கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

இந்த கோரிக்கையை உடனடியாக பரீசிலித்த அமைச்சர் சிவகுமார் 30,000 வெள்ளியை வழங்குவதாக அறிவித்தார்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.