SELANGOR

யு.பி.பி.எஸ். ஏற்பாட்டில் கோல லங்காட்டில் வேலை வாய்ப்புச் சந்தை- 254 பேர் பங்கேற்பு

30 அக்டோபர் 2023, 6:17 AM
யு.பி.பி.எஸ். ஏற்பாட்டில் கோல லங்காட்டில் வேலை வாய்ப்புச் சந்தை- 254 பேர் பங்கேற்பு

பந்திங், அக் 30 - சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின்

ஆதரவுடன சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவு

யு.பி.பி.எஸ்.) ஏற்பாடு செய்த கோல லங்காட் மாவட்ட நிலையிலான

ஜெலாஜா ஜோப்கேர் எனும் வேலை வாய்ப்புச் சந்தையில் 254 பேர் பங்கு

கொண்டனர். யு.பி.பி.எஸ். மேற்கொண்டு வரும் வேலை வாய்ப்பு சந்தைத்

தொடரின் ஐந்தாவது நிகழ்வாக இது அமைந்துள்ளது.

இங்குள்ள ஸ்ரீ ஜூக்ரா மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த

வேலை வாய்ப்புச் சந்தையை மனிதவளத் துறைக்கான மாநில

ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பராய்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி

வைத்தார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் 99 ஸ்பீட்மார்ட், பிரசரானா உள்ளிட்ட

பிரசித்தி பெற்ற 26 நிறுவனங்கள் பங்கு கொண்டு 4,000 வேலை

வாய்ப்புகளை வழங்கின. இங்கு நடைபெற்ற வேலை வாய்ப்புக்கான

நேர்காணலில் 254 பேர் கலந்து கொண்டனர்.

அவர்களில் 27 பேருக்கு உடனடியாக வேலை கிடைத்த வேளையில்

மேலும் 165 பேர் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தைக்கு பொது மக்கள் மத்தியில் கிடைத்த

ஆதரவுக்கு பாப்பாராய்டு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வு

சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஆதரவு வழங்கிய கோல லங்காட்

நகராண்மைக் கழகத்திற்குப் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர்

நன்றித் தெரிவித்துக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.