ACTIVITIES AND ADS

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்புச் சந்தை- ஐ.டி.சி.சி.யில் நடைபெறும்

26 அக்டோபர் 2023, 8:44 AM
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்புச் சந்தை- ஐ.டி.சி.சி.யில் நடைபெறும்

ஷா ஆலம்,  அக் 26-  மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய  சிறப்பு வேலை வாய்ப்புச் சந்தை இம்மாதம்  31ஆம் தேதி   காலை 9.00மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் யாயாசான் வாரிசான்  அனாக்  சிலாங்கூர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள  இந்த  மினி வேலை வாய்ப்புச் சந்தை ஷா ஆலம் ஐ.டி.டி.சி.யில் உள்ள அனிஸ் மையத்தில் நடைபெறும்.

நேர்காணலில்  கலந்து கொள்ள விரும்புவோர் முன்கூட்டியே  போஸ்டரில் உள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து முன் பதிவு செய்ய வேண்டும். சுய விபரக் குறிப்புகள் அல்லது கல்விச் சான்றிதழ்களை (ஏதேனும் இருந்தால்) நேர்காணலின் போது கொண்டு வர வேண்டும்.

இந்த நேர்காணல் 18 முதல் 30 வயதுடைய  மாற்றுத் திறனாளி  கற்றல் பிரிவினருக்கு மட்டுமே திறந்திருக்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.