NATIONAL

சிக் மாவட்டத்தில் வெள்ள நிலைமை சீரடைகிறது- பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப அனுமதி

23 அக்டோபர் 2023, 6:07 AM
சிக் மாவட்டத்தில் வெள்ள நிலைமை சீரடைகிறது- பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப அனுமதி

சிக், அக் 23- நேற்று மாலை 4.00 மணி தொடங்கி பெய்த கடுமையான

மழை காரணமாகச் சிக் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட

வெள்ளம் தற்போது தணிந்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளம் வடிந்து வந்த போதிலும் நேற்று

திறக்கப்பட்ட மூன்று துயர் துடைப்பு மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு

வருவதாக சிக் மாவட்ட பொது தற்காப்பு பிரிவின் அதிகாரி லெப்டினண்ட்

ஹைசுல் ஆயிஷா முகமது நாப்பியா கூறினார்.

மழை நேற்றிரவு நின்றுவிட்ட நிலையில் இன்று காலை சிக்

மாவட்டத்தில் வானம் தெளிவாகக் காணப்படுகிறது என்று அவர்

தெரிவித்தார்.

மூன்று துயர் துடைப்பு மையங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறன.

இன்று காலை அங்கு தங்கியுள்ளவர்கள் வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக

வெளியேறினர் என்று பெர்னாமாவிடம் அவர் சொன்னார்.

அந்த மூன்று துயர் துடைப்பு மையங்களிலும் 20 குடும்பங்களைச் சேர்ந்த

60 பேர் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று மாலை 4.00 மணி தொடங்கி சிக் மாவட்டத்தின் ஏறக்குறை

அனைத்து பகுதிகளில் கடுமையான மழை பெய்ததைத் தொடர்ந்து

அம்மாவட்டத்திலுள்ள எட்டு கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டதாக நேற்று

பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.