NATIONAL

பல்பொருள் அங்காடியின் கழிப்பறையில் பெண் ஒருவரை ஒளிந்திருந்து பார்த்ததாக நம்பப்படும் ஆடவர் கைது

23 அக்டோபர் 2023, 3:33 AM
பல்பொருள் அங்காடியின் கழிப்பறையில் பெண் ஒருவரை ஒளிந்திருந்து பார்த்ததாக நம்பப்படும் ஆடவர் கைது

பாசிர் கூடாங், அக். 23: தாமான் புக்கிட் டாலியாவில் உள்ள பல்பொருள் அங்காடியின் கழிப்பறையில் பெண் ஒருவரை ஒளிந்திருந்து பார்த்ததாக நம்பப்படும் உள்ளூர் ஆடவர் ஒருவரைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

இந்த சம்பவம் காலை 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 23 வயதான அந்த ஆடவரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக ஶ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சொஹைமி இஷாக் கூறினார்.

“சோதனையில் முடிவில் சம்பந்தப்பட்ட நபருக்குக் கடந்தகால குற்றங்கள் எதுவும் இல்லை என்றும், குற்றவியல் சட்டத்தின் 377D பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும்,” அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

மேலும் விசாரணைக்காக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117வது பிரிவின் கீழ், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஜொகூர் பாரு நீதிமன்றத்தில் இன்று விண்ணப்பம் செய்யப்படும் என்றார்.

"வாழ்க்கை விதிமுறைகள் மற்றும் நாட்டின் சட்டங்களை மீறும் செயல்களைச் செய்ய வேண்டாம் என்று பொதுமக்கள் நினைவூட்டப்படுகிறார்கள்.

நேற்று, ஹிஜாப் அணிந்த ஆண் ஒருவர் பெண்கள் கழிப்பறைக்குள் நுழைவதைக் காட்டும் இரண்டு நிமிடம் 11 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலானது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.