MEDIA STATEMENT

பல்பொருள் அங்காடிக் கடைகளில் கைவரிசையை காட்டி வந்த ஐந்து கொள்ளையர்கள் கைது

22 அக்டோபர் 2023, 2:32 AM
பல்பொருள் அங்காடிக் கடைகளில் கைவரிசையை காட்டி வந்த ஐந்து கொள்ளையர்கள் கைது

கோலாலம்பூர், அக் 22- அம்பாங், காஜாங் மற்றும் செராஸ் வட்டாரத்தில் உள்ள இருபத்து நான்கு மணி நேரம் செயல்படும் 7- லெவன் மற்றும் கே.கே.மார்ட் போன்ற பல்பொருள் அங்காடிக் கடைகளில் கொள்ளையிட்டு வந்ததாக நம்பப்படும் ஐவரை போலீசார் செய்துள்ளனர்.

பதினெட்டு முதல் 40 வயது வரையிலான அந்த ஐவரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அஸாம் இஸ்மாயில் கூறினார்.

அம்பாங், ஜாலான் மெமாண்டாவிலுள்ள 24 மணி நேரக் கடை ஒன்றில் கடந்த புதன் கிழமை நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞரிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் அந்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த ஆடவர்களிடமிருந்து உடைகள், கத்தி, கைப்பேசிகள், முகக்கவசம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகக் கூறிய அவர், கைதானவர்களில் நால்வர் மீது போதைப் பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பதிவுகள் உள்ளது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

கைதான அந்த ஐவரையும் விசாரணைக்காக இம்மாதம் 26ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைத் தாங்கள் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவருக்கும் எதிராக குற்றவியல் சட்டத்தின் 395/397 பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.