கோலாலம்பூர், அக் 18 – நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மானியச் சீரமைப்பு மக்களுக்குச் சுமையளிப்பதை ஒருபோதும் நோக்கமாகக் கொண்டதல்ல என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.மாறாக, பணக்காரர்களை மகிழ்விப்பதன் மூலம் மக்களின் பணத்தை அரசாங்கம் வீணாக்காமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என அவர் சொன்னார்.
நான் பெரும் பணக்காரர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், பாதிக்கப்படக்கூடிய
தரப்பினர் மற்றும் ஏழைகளுக்கு நாம் நியாயமாக இருக்க வேண்டும் என்று அவர்
முகநூல் பதிவில் கூறினார்.
முன்னதாக, புத்ராஜெயாவில் நேற்று "மலேசியாவுக்கான பெரும் செழிப்பை நோக்கிய பாதை" என்ற ஆய்வரங்கில் உரையாற்றிய பிரதமர், தேவையற்ற கசிவுகள், பொதுச் சொத்துக்கள் பதுக்கல் மற்றும் ஊழல் இல்லாமையை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து பேசினார்.
ஆகவே, பல ஆண்டுகளாக அரசாங்கம் சுமந்து வரும் பல்லாயிரம் கோடி வெள்ளி இழப்புகளை மீட்டெடுக்க வேண்டும். இதன் மூலம் அத்தொகையை மக்களின் நல்வாழ்வுக்காக முதலீடு செய்ய இயலும் என அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், மலேசியா வளமாகவும் அனைவருக்கும் நியாயமாகவும் இருக்கும் வகையில் நிர்வாகப் பிரச்சனைகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் இன்றியமையாத கடமையாகும் என்று அன்வார் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை மலேசியா மடாணி வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது, மானியங்களை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை அடுத்த
ஆண்டு தொடங்கி படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
ரஹ்மா பண உதவிக்கான ஒதுக்கீட்டை 800 கோடி வெள்ளியிலிருந்து 1,000
அதிகரிப்பதற்கு இந்த மானியங்களில் இருந்து கிடைக்கும் சேமிப்புகள்
பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
NATIONAL
மக்கள் பணம் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்யவே உதவித் தொகை சீரமைப்பு - பிரதமர் விளக்கம்
19 அக்டோபர் 2023, 4:26 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



