NATIONAL

விமான நிறுவனத்தின் இணை நிறுவனர், குடும்பத்தினருக்கு நான்கு நாட்கள் தடுப்புக் காவல்

19 அக்டோபர் 2023, 2:58 AM
விமான நிறுவனத்தின் இணை நிறுவனர், குடும்பத்தினருக்கு நான்கு நாட்கள் தடுப்புக் காவல்

கோலாலம்பூர், அக் 19-  'டத்தோ'  அந்தஸ்து கொண்ட உள்ள உள்ளூர் விமான நிறுவனத்தின் இணை நிறுவனர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர்  நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில்  வைக்கப்பட்டுள்ளனர்.

பணமோசடி தடுப்பு, பயங்கரவாத  நிதியுதவி எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கை வருவாய் சட்டம் 2001 இன் கீழ் விசாரணைக்காக அம்மூவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகப் புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.

விமான நிறுவனம் ஒன்றின் பங்குதாரரான 57 வயது நபர், அவரது 55 வயது மனைவி  மற்றும் அவர்களது 26 வயது மகன்  ஆகியோர்  ஷா ஆலமில் உள்ள அவர்களது வீட்டில் மாலை நேற்று முன்தினம் மாலை5.30 மணிக்குக் கைது செய்யப்பட்டதாகப் பெர்னாமா தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.