NATIONAL

புக்கிட் ஜுக்ராவில் ஏற்பட்ட நிலச்சரிவைச் சரி செய்ய உடனடி நடவடிக்கை தேவை

18 அக்டோபர் 2023, 11:32 AM
புக்கிட் ஜுக்ராவில் ஏற்பட்ட நிலச்சரிவைச் சரி செய்ய உடனடி நடவடிக்கை தேவை

கோலாலம்பூர், அக் 18: புக்கிட் ஜுக்ரா  பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து கோலா லங்காட் பொதுப்பணித்துறை (ஜேகேஆர்) பொறியியல் கிளையின் (சிகேசி) தொழில்நுட்ப ஆலோசனைகள்  பெற்ற பின்னர் சரிவுகளை சரி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.

சாலைப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் வசதிக்காக மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் உடனடி நடவடிக்கை மற்றும் பழுது பார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

"புக்கிட் ஜுக்ரா வரையிலான சாலையை மூடுவதன் மூலம் ஜேகேஆர் பூர்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளது. சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்புக்காக எச்சரிக்கை பலகைகள் மற்றும் போக்குவரத்து மேலாண்மைத் திட்டங்கள்  மேற்கொள்ளுதல்  செயல்படுத்தி வருகிறது.

"சேதம் மற்றும் நிலச்சரிவு மோசமடைவதைத் தடுக்க, ஜேகேஆர் பாதிக்கப்பட்ட இடங்களில் கேன்வாஸ்களையும் நிறுவியுள்ளது," என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நாடு பருவமழை மாற்று காலத்தில் இருப்பதால், மலை சாரல்கள் வழியாகச் செல்லும் போது கவனமாக இருக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு நந்தா அறிவுறுத்தினார்.

கடந்த திங்கட்கிழமை கோலா லங்காட் நகராண்மை கழகம் மலையோர பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து புக்கிட் ஜுக்ரா வரை சாலையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்று பொதுமக்களுக்கு அறிவித்தது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.