கோலாலம்பூர், அக் 18: இன்று காலை 9 மணி நிலவரப்படி, தீபகற்பத்தில் உள்ள நான்கு
பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டு (API) அளவீடுகள்
பதிவாகியுள்ளன. அவற்றில் கிள்ளான் அதிகபட்சமாக 155 ஆகப் பதிவு செய்துள்ளது.
ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டு அளவீடுகளைப் பதிவு செய்த மற்ற மூன்று
பகுதிகளான ஶ்ரீ மன்சோங், பேராக் (123), தங்காக், ஜோகூர் (119) மற்றும் பெட்டாலிங்
ஜெயா, சிலாங்கூர் ( 107) ஆகும் என சுற்றுச்சூழல் துறையின் மலேசிய காற்று மாசுக்
குறியீட்டு மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.
மொத்தம் 54 பகுதிகள் மிதமான காற்று மாசுக் குறியீட்டு அளவீடுகளைப் பதிவு
செய்துள்ளன. அதே நேரத்தில் 10 பகுதிகள் நல்ல அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன.
0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100
மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும்
ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300
மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.








