NATIONAL

இருவர் நீரில் மூழ்கி இறந்து கிடந்தனர்

16 அக்டோபர் 2023, 9:51 AM
இருவர் நீரில் மூழ்கி இறந்து கிடந்தனர்

ஷா ஆலம், அக்.16: கிள்ளான் அருகே உள்ள பண்டார் புத்ரி, ஏரியில் நேற்று நள்ளிரவு இருவர் நீரில் மூழ்கி இறந்து கிடந்தனர்.

நள்ளிரவு 12 மணியளவில் 29 மற்றும் 30 வயதுடைய அந்த இருவரின் சடலம் கண்டுபிடிக்கப் பட்டதாகச் சிலாங்கூர் தீயணைப்பு நடவடிக்கைகளின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இரவு 9.07 மணிக்கு அவசர அழைப்பு வந்தவுடன் அண்டலாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) அதிகாரிகள் உட்பட நான்கு உறுப்பினர்களும், பிபிபி ஷா ஆலம் மற்றும் போர்ட் கிள்ளானிலிருந்து நீர் மீட்புக் குழுவின் (பிபிடிஏ) எட்டு உறுப்பினர்களும் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் மேற்பரப்பில் தேடுதல் நடவடிக்கை நடத்திய பிறகு, அவ்விருவரும் கரையிலிருந்து 10 மீட்டர் தொலைவில் இரண்டு மீட்டர் ஆழத்தில் ஏரியின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அஹ்மட் முக்லிஸ் கூறினார்.

"அவர்கள் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தாக நம்பப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள் மேல் நடவடிக்கைக்காகக்  காவல்துறையிடம் ஒப்படைப்போம்" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.