MEDIA STATEMENT

கிள்ளான், கம்போங் ஜாவா பகுதியில் கால்வாய் நிர்மாணிப்பை துரிதப்படுத்த குணராஜ் உத்தரவு

14 அக்டோபர் 2023, 7:25 AM
கிள்ளான், கம்போங் ஜாவா பகுதியில் கால்வாய் நிர்மாணிப்பை துரிதப்படுத்த குணராஜ் உத்தரவு

கிள்ளான், அக் 14- இங்குள்ள கம்போங் ஜாவா சாலையில் கால்வாய் நிர்மாணிப்பு பணிகளை விரைவுபடுத்தும்படி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

ஆண்டு இறுதியில் மழைகாலம் தொடங்கும் சாத்தியம் உள்ள நிலையில் கால்வாய் நிர்மாணிப்பு பணிகள் இன்னும் முழுமை பெறாதது குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்தைத் தொடர்ந்து ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் பொறியியல் துறை அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட பகுதியை குணராஜ்  அண்மையில் பார்வையிட்டார்.

இங்கு கால்வாய்களை அமைக்கும் பணி சில இடங்களில் இன்னும் பூர்த்தி செய்யப்படாமலிருப்பதை மாநகர் மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த அவர், இப்பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படுவதை மாநகர் மன்றம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த கால்வாய் நிர்மாணிப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதன் மூலம் இப்பகுதியில் வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தை தவிர்க்க இயலும் என்றும் அவர் சொன்னார்.

மேலும், அந்த பகுதியில் காணப்படும் அடர்த்தியான புதர்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அவர் மாநகர் மன்றத்தை வலியுறுத்தினார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.