MEDIA STATEMENT

பட்ஜெட் தாக்கலின் போது திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் 

13 அக்டோபர் 2023, 12:50 PM
பட்ஜெட் தாக்கலின் போது திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் 

கோலாலம்பூர், அக் 13- நாடாளுமன்றத்தில் இன்று 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திருக்குறளை மேற்கோள் காட்டினார். 

“இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லதரசு“ என்ற குறளை அவர் வாசித்த போது அவையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசையைத் தட்டி தங்களின் மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர்.

பின்னர் அவர், முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்க கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்து திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும் என அந்த குறளுக்கான விளக்கத்தையும் கூறினார்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.