NATIONAL

ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் வெகுமதிகளை ஆய்வு செய்ய தனியார் துறைக்கு  அரசாங்கம் பரிந்துரை

13 அக்டோபர் 2023, 12:39 PM
ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் வெகுமதிகளை ஆய்வு செய்ய தனியார் துறைக்கு  அரசாங்கம் பரிந்துரை

கோலாலம்பூர், அக் 13: தற்போதைய வாழ்க்கைச் செலவு சவால்களைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் வெகுமதிகளின் சரியான தன்மையை ஆய்வு செய்ய நாட்டிலுள்ள தனியார் துறையை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

அடுத்த ஆண்டு  அதற்கான பணியை  அரசாங்கம் தீவிரப்படுத்த உள்ளதாக நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

இன்று டேவான் ராக்யாட்டில் 'பொருளாதார சீர்திருத்தம், மக்களுக்கு பங்களித்தல்' என்ற கருப்பொருளுடன் 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, "தனியார் துறையை குறிப்பாக நியாயமான லாபம் ஈட்டும் நிறுவனங்கள்  தக்க  வெகுமதி அளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.