காசா, அக் 11 - வடக்கு காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனிய செஞ்சிலுவை சங்கத் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் ஜெட் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாக மீட்புச் சேவைப் பிரிவை மேற்கோள் காட்டி ஜெர்மன் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இத்தாக்குதலில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட காயங்கள் அல்லது இறப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. இச்சம்பவம் தொடர்பான அறிக்கைகளை தாங்கள் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மருத்துவமனை படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக காசா சுகாதார அமைச்சு கூறியது. மேலும், அனைத்து மருந்துகளும் தீர்ந்து விட்டதோடு மருத்துவ உபகரணங்களின் விநியோகமும் குறைவாக உள்ளதாக அது தெரிவித்தது.
கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) முதல் இஸ்ரேல் நடத்தி வரும் விமானத் தாக்குதல்களால் காசா பகுதியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,055 பேராக உயர்ந்துள்ளது.








