NATIONAL

போதுமான பயணிகள் இல்லாததால் புறநகர்ப் பகுதிகளில் குறைவான போக்குவரத்து சேவை- அந்தோணி லோக் விளக்கம்

11 அக்டோபர் 2023, 6:30 AM
போதுமான பயணிகள் இல்லாததால் புறநகர்ப் பகுதிகளில் குறைவான போக்குவரத்து சேவை- அந்தோணி லோக் விளக்கம்

கோலாலம்பூர், அக் 11- நாட்டின் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து

சேவையை வழங்க போக்குவரத்து நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதற்கு

பயணிகள் எண்ணிக்கை குறைவும் போதுமான வருமானம் இல்லாமையும்

காரணம் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியு ஃபூக்

கூறினார்.

எனினும், இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு குறிப்பாக சமூக வேன்

சேவையை வழங்க இதில் சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் ஒத்துழைப்பை

நல்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

புறநகர்ப் பகுதிகளில் சேவையை வழங்க போக்குவரத்து நிறுவனங்கள்

தயக்கம் காட்டுகின்றன. பயணிகள எண்ணிக்கை குறைவும் போதிய அளவு

வருமானமின்மையும் இதற்கு காரணம் என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரத்தில் தனியார் நிறுவனங்களுடன் மட்டுமின்றி அரசு சாரா

அமைப்புகள், நாடாளுமன்ற சேவை மையங்கள் மற்றும் ஆர்வமுள்ள இதர

அமைப்புகளுடன் இணைந்து செயல்பட அரசாங்கம் தயாராக உள்ளது

என்றார் அவர்.

இந்த சமூக வேன் சேவையை நிர்வாகிப்பதற்கு முறையான கண்காணிப்பு

செயல்திட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர்

குறிப்பிட்டார்.

மக்களவையில் இன்று தஞ்சோங் காராங் உறுப்பினர் டாக்டர்

ஜூல்காஃபெரி ஹனாப்பி எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில்

அவர் இவ்வாறு தெரிவித்தார். புறநகர்ப் பகுதிகளில் பொது

போக்குவரத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும்

முயற்சிகள் குறித்து டாக்டர் ஜூல்காஃபெரி கேள்வியெழுப்பியிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.