NATIONAL

தீபகற்ப மலேசியாவின் இரு இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

11 அக்டோபர் 2023, 6:26 AM
தீபகற்ப மலேசியாவின் இரு இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

கோலாலம்பூர், அக் 11- இன்று காலை 9.00 மணி நிலவரப்படி தீபகற்ப

மலேசியாவின் இரு இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற

நிலையில் பதிவானது.

மலாக்கா மாநிலத்தின் புக்கிட் ரம்பாய் மற்றும் ஜோகூர் மாநிலத்தின்

லார்க்கின் ஆகிய பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு (ஏ.பி.ஐ.) முறையே

153 மற்றும் 126ஆகப் பதிவானதாக சுற்றுச்சூழல் துறையின் காற்றுத் மாசுக்

குறியீட்டு மேலாண்மை முறை கூறியது.

இதனிடையே, 57 பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் பதிவான

வேளையில் ஒன்பது இடங்களில் சிறப்பானதாக இருந்தது என்று அது

தெரிவித்தது.

சூழியம் முதல் 50 வரையிலான ஏ.பி.ஐ. அளவு சிறப்பானதாகவும் 51

முதல் 100 வரையிலான அளவு மிதமானதாகவும் 101 முதல் 200

வரையிலான அளவு ஆரோக்கியமற்றதாகவும் 201 முதல் 300 வரையிலான

அளவு மிகவும் ஆரோக்கியமற்றதாகவும் 300 மேற்ப்பட்ட அளவீடு

ஆபத்தானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்து.

நாடு முழுவதும் உள் 68 காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களில்

பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு

முறை ஏ.பி.ஐ.அளவீடு தொடர்பான தரவு வெளியிடப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.