NATIONAL

நாட்டில் வறுமையைக் குறைக்க நிதிக் கொள்கயில் மேம்பாடு

11 அக்டோபர் 2023, 4:07 AM
நாட்டில் வறுமையைக் குறைக்க நிதிக் கொள்கயில் மேம்பாடு

கோலாலம்பூர், அக் 11- நாட்டில் வறுமை மற்றும் சமத்துவமின்மையைக் குறைக்கும் வகையில் 2024 பட்ஜெட்டில் மலேசியாவின் நிதிக் கொள்கையை மேம்படுத்துவதற்கான முற்போக்கான நடவடிக்கைகளை எடுக்க நிதி அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

"நிதிக் கொள்கை தற்போது வறுமையில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துவதைக் கேட்பது ஆச்சரியமாக இருந்தது."  எனக் கருவூலத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூட் மெரிக்கன் கூறினார்.

“வறுமையைக் குறைப்பதில் எங்களின் சாதனையைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப் படுகிறோம். சுதந்திரத்தின் போது (1957 இல்), இது 50 சதவீதமாக இருந்தது. இப்போது ஆறு சதவீதத்தில் உள்ளது,” என்று அவர் 28வது உலக வங்கி மலேசிய பொருளாதார கண்காணிப்பு அறிக்கையின் வெளியீட்டு விழாவில் கூறினார்.

துனாய் ரஹ்மா (STR) உதவி திட்டமானது B20 கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மேலும் மேம்படுத்தப் படுவதிலும் கவனம் செலுத்தப்படும் என்று ஜோஹன் கூறினார்.

"இத்திட்டம் 12 மில்லியன் பெரியவர்களுக்குப் பயனளிக்கிறது அதாவது இது மக்கள் தொகையில் 60 சதவிகிதம் ஆகும்," என்று அவர் கூறினார்.

"மலேசியாவில் வருமான வறுமை 10 சத வீதத்திற்கும் குறைவாக உள்ளது, இது மலேசியாவின் பல தசாப்தங்களின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் நீண்ட சாதனையை பிரதிபலிக்கிறது" என்று அறிக்கை கூறுகிறது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.