NATIONAL

தொழிற்சங்கச் சட்டதிருத்த மசோதாவை அமைச்சர் சிவகுமார் நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்தார்

10 அக்டோபர் 2023, 12:40 PM
தொழிற்சங்கச் சட்டதிருத்த மசோதாவை அமைச்சர் சிவகுமார் நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்தார்

கோலாலம்பூர், அக்.10- தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட தொழிற்சங்க சட்டம் 1959ஐ திருத்தம் செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று  இரண்டாவது வாசிப்புக்காக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் முன் வைத்தார்.

தொழிற்சங்க (திருத்தம்) மசோதா 2023, தொழிலாளர் சந்தையை வலுப்படுத்துவதற்கும் தொழிலாளர்களின் இழப்பீட்டை அதிகரிப்பதற்கும் பெரிதும் உதவும்.

மேலும்,  தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களை அதிகரிப்பதற்கான முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கான 12ஆவது மலேசியக்  கொள்கை அமலாக்கத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் மற்றும் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் ஆகியோர் இந்த சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து பேசினர் என்பது

குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.