NATIONAL

புதிய கட்சிக்கு பிரதமரின் ஆதரவும் அங்கீகாரமும் கிடையாது- பிரதமர் அலுவலகம் விளக்கம்

10 அக்டோபர் 2023, 2:58 AM
புதிய கட்சிக்கு  பிரதமரின் ஆதரவும் அங்கீகாரமும் கிடையாது- பிரதமர் அலுவலகம் விளக்கம்

கோலாலம்பூர், அக் 10 - நாட்டில் புதிய அரசியல் கட்சியை தோற்றுவிக்க முயற்சிக்கும் எந்த தரப்பினரையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆதரிக்கவில்லை அல்லது அங்கீகரிக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம்  தெளிவுபடுத்தியுள்ளது.

பிரதமரின் பெயரை எந்த தரப்பினரும் அனுமதியின்றிப் பயன்படுத்துவதை தாங்கள் கடுமையாகக் கருதுவதாக பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அத்தகைய செயல் மிகவும் பொறுப்பற்றது என்பதோடு  பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, இந்த விஷயத்தில் எந்த தரப்பினரும் வெளியிடும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகளால் பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்துகிறது என்று அந்த அறிக்கை கூறியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.