கோலாலம்பூர், அக் 9: மாநாட்டின் போது பார்க்கிங் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, கேஎல் சென்ட்ரலில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இலவச வேன் சேவை (டி851) நாளை முதல் டிசம்பர் 14 வரை அமல்படுத்தப்படும்.
நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வப் பணிகள் கொண்ட பயனர்களுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது என முகநூல் மூலம் ரேபிட் பேருந்து தெரிவித்துள்ளது
"நீங்கள் தாமான் பொத்தானி பெர்டானாவுக்குச் செல்ல விரும்பினால், இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்" என்று ரேபிட் பேருந்து பகிர்ந்த ஒரு போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த சேவை வழங்கப்படும் என்றும் ரேபிட் பஸ் தெரிவித்துள்ளது.
15வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது தவணையின் மூன்றாவது கூட்டம் இன்று முதல் நவம்பர் 30 வரை நடைபெறும் மற்றும் மேலவை அல்லது செனட் கூட்ட தொடர் நவம்பர் 27 முதல் டிசம்பர் 14 வரை நடைபெறும்.
கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட பார்கிங் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை சமாளிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கேஎல் சென்ட்ரலில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்துக்கு இலவச ஷட்டில் பேருந்து சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
– பெர்னாமா








