காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 413 பலி

9 அக்டோபர் 2023, 3:13 AM
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 413 பலி

காசா, அக் 9: காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,300 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

காசாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள பல வீடுகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியதன் விளைவாக இறந்தவர்களில் 78 குழந்தைகள் மற்றும் 41 பெண்கள் அடங்குவர் என்று பலஸ்தீன செய்தி நிறுவனம் (WAFA) தெரிவித்துள்ளது.

தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரத்திலும், வடக்கே உள்ள பெய்ட் ஹனூன் நகரத்திலும் இஸ்ரேல் நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதல்களில் கைக் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களின் உயிரைப் பறித்தன.

-பெர்னாமா-வாஃபா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.