MEDIA STATEMENT

மித்ரா உதவியுடன் உலு லங்காட் தொகுதி இந்தியர்களுக்கு சமூக பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கை.

8 அக்டோபர் 2023, 1:28 AM

செய்தி ; சு. சுப்பையா

செமிஞ்சே. அக்.7-  இந்திய சமுதாய பொருளாதார மேம்பாட்டிற்கு மித்ராவின் உதவியோடு உலு லங்காட் நாடாளுமன்ற தொகுதியில்  உள்ளூர் மக்கள் மற்றும்  தமிழ்ப்பள்ளிகளின் ஒத்துழைப்புடன்  ஒன்றுகூடலை  நடத்தியது  உலு லங்காட் மக்கள் நீதி கட்சி.

மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே ஆடை அலங்கார நிகழ்ச்சி நடந்தேறியது.   இந்த நிகழ்வுக்கு 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள்  திரண்டு வந்திருந்தனர்.   இந்த நிகழ்ச்சியை உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சானி ஹம்சான் அதிகாரப்பூர்வமாக திறந்து  வைத்து  உரையாற்றினார். அரங்கம் நிறைந்த இந்தியர்கள் வந்திருந்த மகிழ்ச்சியில் இராசன் முனுசாமி தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினரை அவர் வெகுவாக பாராட்டினார்.

காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராமசந்திரன் அர்ஜுனன் மற்றும் சந்திரன் இராமசாமியும் உடன் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தனர்.

உலு லங்காட் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய சமூக மேம்பாட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.