NATIONAL

பெலாங்கி இடைத்தேர்தலில் மொத்தம் 69 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் - தேர்தல் ஆணையம்

7 அக்டோபர் 2023, 11:53 AM
பெலாங்கி இடைத்தேர்தலில் மொத்தம் 69 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் - தேர்தல் ஆணையம்

பெந்தோங், அக் 7: பெலாங்கி தொகுதியின் இடைத் தேர்தலுக்கான (பிஆர்கே) வாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி அனைத்து வாக்குச் சாவடிகளும் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

இதில் 30 பிரிவுகளை உள்ளடக்கிய ஒன்பது வாக்குச் சாவடி மையங்களில் உள்ள அனைத்து வாக்குப் பெட்டிகளும் ஃபெல்டா கெமாசுல் பொது மண்டபத்தில் உள்ள அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இன்று இரவு 9 மணிக்கு அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி, இடைத்தேர்தலில் மொத்தம் 69 சதவீதம் பேர் வாக்களிக்கச் சென்றதாக தேர்தல் ஆணையம் (SPR) தெரிவித்துள்ளது.

மொத்தம் 16,456 வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற தகுதி பெற்றுள்ளனர், இதில் 36 காவலர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டு வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ அமிசார் அபு ஆடாம், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் காசிம் சமட் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஹஸ்லிஹெம்லி டி.எம்.சுல்ஹஸ்லி ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.