NATIONAL

திடக்கழிவு சுத்திகரிப்பு நடவடிக்கைகள் நள்ளிரவில் மேற்கொள்ளப்படும்

7 அக்டோபர் 2023, 8:48 AM
திடக்கழிவு சுத்திகரிப்பு நடவடிக்கைகள் நள்ளிரவில் மேற்கொள்ளப்படும்

ஷா ஆலம், அக் 7: நள்ளிரவில் திடக்கழிவு சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மாநிலத்தில் மேலும் பல வணிகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என்று KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

வணிகப் பகுதிகளான எஸ்.எஸ்.14 மற்றும் எஸ்.எஸ்.15, சுபாங் ஜெயா ஆகிய இடங்களில் கழிவு சேகரிப்பு நடவடிக்கை சீராக நடந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோ ராம்லி முகமட் தாஹிர் கூறினார்.

"நாங்கள் சுபாங் ஜெயாவில் (நள்ளிரவு முதல் அதிகாலை வரை திடக்கழிவு சேகரிப்பு) செய்துள்ளோம்.ஏனெனில் பொதுவாக வணிகப் பகுதிகள் காலையில் கார்களால் நிரம்பியுள்ளன. அதனால், சுத்தம் செய்யும் வேலையை கடினமாக்குகின்றன.

"எனவே வேறு சில வணிகப் பகுதிகளையும் இத்திட்டத்தில் இணைக்க ஆராய்ந்து வருகிறோம், குறிப்பாகக் கிள்ளான், ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் ஆகும். இத்திட்டம் எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால், எதிர்காலத்தில் அட்டவணையை மாற்றுவதற்கான வாய்ப்பை நாங்கள் நிராகரிக்க மாட்டோம்," என்று அவர் கூறினார்.

செப்டம்பர் 13 அன்று, ராம்லி அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷால் இங் மேயின் முன்மொழிவு குப் பிறகு SS14 மற்றும் SS15, சுபாங் ஜெயா பகுதி  நள்ளிரவு முதல் அதிகாலை வரை சுத்தம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

சாலை முழுவதும் வாகனங்கள் நிரம்பி இருப்பதால், பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து காலை முதல் மதியம் வரை கழிவுகளை சுத்தம் செய்யவதில் ஒப்பந்ததாரர் சிரமத்தை எதிர்கொள்கிறார்.

"நாங்கள் சுபாங் ஜெயாவில் (நள்ளிரவு முதல் அதிகாலை வரை திடக்கழிவு சேகரிப்பு) செய்துள்ளோம். ஏனெனில் பொதுவாக வணிகப் பகுதிகள் காலையில் கார்களால் நிரம்பியுள்ளதால் சுத்தம் செய்யும் வேலையை கடினமாக்குகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.