இறக்குமதி அரிசி தூய்மையானது மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு
பாதுகாப்பானது என்று உறுதியளித்துள்ளது.நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாகச் சமூக ஊடகங்கள்
மூலம் செய்திகள் பரப்பப் படுவது தொடர்பாகப் பொறுப்பற்ற தரப்பினரின் கூற்றுகளை
மறுப்பதாகப் பெர்னாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்ளூர் அரிசி விநியோகத்தின் ஒவ்வொரு
கட்டத்திலும் தரநிலைகள் மற்றும் கடுமையான தரக் கண்காணிப்பு ஆகியவற்றை
பெர்னாஸ் எப்போதும் உறுதி செய்கிறது.
நாட்டிற்குக் கொண்டு வரப்படும் அனைத்து வகையான இறக்குமதி செய்யப்பட்ட
அரிசிகளும் கடுமையான நிபந்தனைகள் மற்றும் துல்லியமான தர ஆய்வு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்குக் கொண்டு வரப்படும் அரிசியின் தரம், சரிபார்ப்பு சான்றிதழ்கள் மற்றும் அரிசி
விவரக்குறிப்புகள் அரசாங்கத்தால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாக
அந்நிறுவனம் விளக்கமளித்தது.
பொறுப்பற்ற தரப்பினரால் பரப்பப்படும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும்
பொதுமக்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது வாங்கிய பெர்னாஸ் அரிசி
பொருட்களில் சந்தேகத்திற்கிடமான கூறுகள் இருப்பதைக் கண்டால், information@bernas.com.my.என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் அதிகாரப்பூர்வப்
புகாரை அனுப்பவும்.
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை
பரப்பும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கப்
போவதில்லை என்றும் பெர்னாஸ் வலியுறுத்தியுள்ளது.
– பெர்னாமா








