NATIONAL

மலேசியா-ஐக்கிய அரபு சிற்றரசு இடையே பரந்த வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள்

6 அக்டோபர் 2023, 3:23 PM
மலேசியா-ஐக்கிய அரபு சிற்றரசு இடையே பரந்த வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள்

அபுடாபி, அக் 6 - ஐக்கிய அரபு சிற்றரசுடன் (யு ஏ.இ.) பரந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மலேசியா எதிர்பார்க்கிறது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் கூறினார்.

ஐக்கிய அரபு சிற்றரசு மேற்கு ஆசிய சந்தையில் நுழைவதற்கு மலேசியா எப்போதும் நுழைவாயிலாக இருந்து வருவதாகக் கூறிய அவர், மேற்கு ஆசிய பிராந்தியத்தைப் பொறுத்த வரை மலேசியாவின் மிகப்பெரிய முதலீட்டாளராகவும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் இரண்டாவது பெரிய உறுப்பினராகவும் அந்நாடு விளங்கி வருகிறது என்றார்.

மலேசியாவின் பல்வேறு உற்பத்தித் திட்டங்களில் ஐக்கிய அரபு சிற்றசிடமிருந்து இருந்து இதுவரை 388.8 மில்லியன் அமெரிக்க டாலர் (1.48 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை ஐக்கிய அரபு சிற்றரசின் தொழில்துறையினருடன் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நடத்திய வட்ட மேசை சந்திப்பின் போது ஜப்ருல் தனது தொடக்க உரையில் இவ்வாறு தெரிவித்தார்.

ஆறு கோடியே 78 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மற்றும் கடந்த 2022 இல் 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியைகப்

பதிவு செய்த அந்நாட்டிற்கு ஆசியான் பரந்த வர்த்தக வாய்ப்புகளை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ப்ரி அப்துல் காடிர் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் தானி அகமது அல் ஜயோதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.