NATIONAL

பெற்றத் தாயைத் தாக்கி காயப்படுத்தியது தொடர்பில் மூன்று சகோதரர்கள் கைது

6 அக்டோபர் 2023, 12:26 PM
பெற்றத் தாயைத் தாக்கி காயப்படுத்தியது தொடர்பில் மூன்று சகோதரர்கள் கைது

சிரம்பான், அக் 6- பெற்றத் தாயை தாக்கி காயப்படுத்தியதாக க் கூறப்படும்

சம்பவம் தொடர்பில் மூன்று சகோதரர்களை போலீசார் கைது

செய்துள்ளனர்.

பதினேழு முதல் 29 வயது வரையிலான அந்த மூன்று சகோதரர்களும்

போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று மாலை 6.30

மணிளவில் சரணடைந்ததாக போர்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர்

சூப்ரிண்டெண்டன் அய்டி ஷாம் முகமது கூறினார்.

கைது செய்யப்பட்ட மூவரும் எந்த குற்றப்பின்னணியையும்

கொண்டிருக்கவில்லை என்பதும் அவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர்

சோதனையில் போதைப் பொருளை உட்கொண்டிருக்கவில்லை என்பதும்

தெரிய வந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த மூன்று சகோதரர்களும் குற்றவியல் சட்டத்தின் 323 மற்றும் 427வது

பிரிவுகளின் கீழ் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்குத் தடுத்து

வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

விசாரணை அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஏதுவாக சாட்சிகளிடம் தாங்கள்

வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகவும் மேல் நடவடிக்கைக்காக அந்த

அறிக்கை பின்னர் நெகிரி செம்பிலான் சட்டத் துறை அலுவலகத் தரப்பிடம்

ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆடவர் ஒருவர் தன் தாயாரைத் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி

ஒன்று சமூக ஊடங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.