MEDIA STATEMENT

ஆரோக்கியமான மக்களே நாட்டின் செல்வம்

4 அக்டோபர் 2023, 4:25 AM
ஆரோக்கியமான மக்களே நாட்டின் செல்வம்
ஆரோக்கியமான மக்களே நாட்டின் செல்வம்

செய்தி சு.சுப்பையை

ஆரோக்கியமான மக்களே நாட்டின் வளம்

ஈஜோக். அக்.- கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியுடன் வட்டார பொதுமக்கள் சுகாதார நலனை முன் வைத்து ஆரோக்கியமான சமூகம்  என்ற இலவச சுகாதார நல சேவை நடைபெறவிருக்கிறது.

இச்சேவையை கோல சிலாங்கூர் நாடாளுன்ற அலுவலகம் மற்றும் புன்சாக் ஆலமில் உள்ள சுல்தான் அப்துல்லா மருத்துவமனையும்( யு.ஐ.தி.எம் ) இணைந்து ஏற்பாடு செய்துள்ளது என்று ஜெராம் சட்ட மன்ற இந்திய சமுதாய தலைவர் மணிவண்ணன் தெரிவித்தார்.

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை கோல சிலாங்கூர் பண்டார் பாரு பொது மண்டபத்தில் நடை பெற விருக்கிறது.

இந்த ஆரோக்கியமான நிகழ்வில் கோல சிலாங்கூர் வாழ் இந்தியர்கள் திரளாக கலந்து கொள்ள அழைக்கப் படுகின்றனர். இங்கு இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை, இரத்தத்தில் சீனி அளவு, கோவிட் 19 பரிசோதனை என பல்வேறு இலவச மருத்துவ சேதனைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்த இலவச உடல் ஆரோக்கிய நலச் சேவையை இவ்வட்டாரத்தில் உள்ள இந்தியர்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மணிவண்ணன் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.