ஹாங்சோ, செப் 27: 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மூன்றாவது நாளான நேற்று ஹாங்சோ மண்ணில் முதல் பதக்கத்திற்கான மலேசியக் குழுவின் காத்திருப்பு படகு ஓட்ட குழுவின் வெண்கலப் பதக்கம் வெற்றியின் வழி முடிவுக்கு வந்தது.
இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அணிக்கான முதல் பதக்கம் வென்றவர் என்ற பெருமையை 17 வயது மாலுமி அஸ்னாவி இக்பால் ஆடம் பெற்றார்.
அஸ்னாவி 11 பந்தயங்களில் கடைசிப் போட்டியை ஒன்பதாவது இடத்தில் முடித்தாலும், 42 பெனால்டி புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
தாய்லாந்து வீரர் வெகா பானுபந்த் (13 புள்ளிகள்) தங்கமும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஐசக் கோ (21) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
- பெர்னாமா








