ANTARABANGSA

ஈராக்கில் கோரச் சம்பவம் - திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீயில்- 100 பேர் மரணம், 150 பேர் காயம்

27 செப்டெம்பர் 2023, 4:37 AM
ஈராக்கில் கோரச் சம்பவம் - திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீயில்- 100 பேர் மரணம், 150 பேர் காயம்

நினேவே, செப் 27- ஈராக்கின் நினேவே பிரதேசத்தின் ஹம்டானியா

மாவட்டத்தில் திருமண மண்டபத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் 100க்கும்

மேற்பட்டோர் உயிரிழந்ததோடு மேலும் 150 பேர் வரை காயமடைந்தனர்.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களின்

எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என உள்நாட்டு ஊடகத் தகவல்கள்

கூறுகின்றன.

இந்த திருமண மண்டபத்தில் மிகவும் பிரமாண்ட அளவில் நடத்தப்பட்ட

திருமண நிகழ்வின் போது நடத்தப்பட்ட வாண வெடி நிகழ்வில் இந்த

தீவிபத்து ஏற்பட்டதாக உள்ளூர் பாதுகாப்புப் பிரிவினர் கூறினர்.

தீயணைப்பு வீரர்கள் தீப்பற்றி எரிந்த அந்த கட்டிடத்தில் ஏறி

பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் காட்சிகளை

ஊடகங்கள் ஒளிபரப்பின.

அந்த திருமணம் மண்டபம் அமைந்துள்ள கட்டிடம் எளிதாக

தீப்பிடிக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது தொடக்க

கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஈராக் அரசாங்க மற்றும் குர்டிஸ்தான் பகுதி சுயாட்சிப் பிரதேசத்தின்

அம்புலன்ஸ் வண்டிகளும் மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு

விரைவதாக அதிகாரத்துவ தகவல்கள் கூறுகின்றன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.