ANTARABANGSA

லஹாட் டத்துவில் சிறுவன் கொடூரக் கொலை- சந்தேக நபர் கைது

25 செப்டெம்பர் 2023, 3:00 AM
லஹாட் டத்துவில் சிறுவன் கொடூரக் கொலை- சந்தேக நபர் கைது

லஹாட் டத்து, செப் 25- பெல்டா சஹாபாட் குடியிருப்பு பகுதியில் சிறுவன்

ஒருவனை கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றதாக

சந்தேகிக்கப்படும் அந்நிய நாட்டு ஆடவனை போலீசார் நேற்று

வெற்றிகரமாக மடக்கிப் பிடித்தனர்.

அந்த 33 ஆடவன் பெல்டா துணை போலீஸ் பிரிவின் உதவியுடன்

சஹாபாட் 41, லாடாங் எப்.ஜி.வி. புளோக் பகுதியில் கைது

செய்யப்பட்டதாக டஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி

ரோஹான் ஷ அகமது கூறினார்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பாராங்கத்தி மறைத்து

வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்து தகவலை சந்தேகப்பேர்வழி

தெரிவித்ததைத் தொடர்ந்து மோப்ப நாயின் உதவியுடன் புதர் ஒன்றில்

மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த கத்தியை தாங்கள் மீட்டதாக அவர்

சொன்னார்.

கைதான சந்தேகப்பேர்வழியை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான

நீதிமன்ற உத்தரவை தாங்கள் இன்று பெறவுள்ளதாக அறிக்கை ஒன்றில்

அவர் தெரிவித்தார்.

பதினோரு வயதுடைய சிறுவன் ஒருவன் இரத்த வெள்ளத்தில் தனது

வீட்டில் இறந்து கிடந்ததாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.

வளர்ப்பு பெற்றோரின் நண்பன் என சந்தேகிக்கப்படும் இந்தோனேசிய

நபரால் இந்த சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என

கூறப்பட்டது.

அந்த சிறுவனின் தலையின் முன்புறம் மற்றும் பின்புறத்திலும் கழுத்திலும்

வெட்டுக் காயங்கள் காணப்பட்டதோடு இடது கை மணிக்கட்டும்

துண்டிக்கப்பட்டிருந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.