MEDIA STATEMENT

கடற்கரை மணலில் புதையுண்ட நிலையில் பெண்ணின் சடலம்  கண்டுபிடிப்பு

24 செப்டெம்பர் 2023, 10:23 AM
கடற்கரை மணலில் புதையுண்ட நிலையில் பெண்ணின் சடலம்  கண்டுபிடிப்பு

 மலாக்கா, செப் 24-  இங்குள்ள தஞ்சோங் கிளிங், புத்ரி கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் இன்று கண்டெடுக்கப் பட்டது.

 கடற்கரை மண்லில் புதையுண்ட நிலையில் தலைக் குப்புறக் கிடந்த   20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின் உடலை  காலை 8.00 மணியளவில் ஆடவர் ஒருவர்   கண்டதாக  மலாக்கா  தெங்கா மாவட்ட  காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.

உயிரிழந்தவரின் உடல் மீது மேற்கொள்ளப்பட்ட  முதல் கட்ட பரிசோதனையில்  காயங்கள் அல்லது குற்றத்தன்மை எதுவும் இல்லை என்பது கண்டறியப் பட்டதோடு கைரேகை  மூலம் அவரின் அடையாளத்தைக்  கண்டறிய முயற்சி மேற்கொள்ளப் படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இறந்தவரின்  தோள்பட்டையில் காணப்படும் பி.சி.ஜி. ஊசி செலுத்தப் பட்டதற்கான தழும்பின்   அடிப்படையில் அவர் மலேசிய பிரஜையாக இருக்கக்கூடும் என நாங்கள் நம்புகிறோம்  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அப்பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனையின் தடயவியல்   துறைக்கு கொண்டு செல்லப் பட்டதாகக் கூறிய அவர், சம்பவத்தைப் பார்த்தவர்கள் அல்லது தகவல் அறிந்தவர்கள் விசாரணைக்கு உதவ அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.