ANTARABANGSA

சிங்கை அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு பேரரசர் வாழ்த்து

16 செப்டெம்பர் 2023, 4:03 AM
சிங்கை அதிபர் தர்மன்  சண்முகரத்தினத்திற்கு பேரரசர் வாழ்த்து

கோலாலம்பூர், செப் 16- சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக நேற்று பதவியேற்ற தர்மன் சண்முகரத்தினத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தாபா பில்லா ஷா அல்ஹாஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் தங்கள் பிரஜைகளுக்கு முன்னேற்றத்தையும் செழிப்பையும் கொண்டு வருவதற்கு ஏதுவாக  மலேசியாவும் சிங்கப்பூரும்  தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றி வரும் என்று இஸ்தானா நெகாராவின் முகநூல் பதிவில் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆழமான வரலாற்று உறவுகளைக் கொண்ட இரு அண்டை நாடுகளான மலேசியாவும் சிங்கப்பூரும்  பரஸ்பர நலனுக்காகவும் இரு தரப்பு பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த  1ஆம் தேதி நடைபெற்ற அதிபர்  தேர்தலில் 25 லட்சம் வாக்குகளில் 70 விழுக்காட்டிற்கும் மேல் பெற்று தரமன் சண்முகம் வெற்றி பெற்றார்.

நேற்று அதிராகப் பதவியேற்றப் பிறகு ஆற்றிய தனது முதல் உரையில்,   அரசாங்கத்தின் குறிக்கோள்கள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப வெளிநாடுகளில்  சிங்கப்பூரை பிரதிநிதிக்கவும்  குடியரசின் நலன்களை மேம்படுத்தவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.